\
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் மரணம்

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் மரணம்

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் மரணம்
Published on

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

தமிழ் சினிமாவின் தளபதி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இவரின் தந்தை சிவன், மலையாளத் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனராக வலம் வந்தார். மேலும் Abhayam, Yagam, Kochu Kochu Mohangal உள்ளிட்ட படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார்.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சிவன் தன்னுடைய 89-வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார். இவரின் மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சய் சிவன் ஆகிய மூவரும் திரைத்துறையில் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com