சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சிங்க பாதை' படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சிங்க பாதை' படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சிங்க பாதை' படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்
சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள சிங்க பாதை திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.
டான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ உதவியாளர் அசோக் இயக்கும் 'சிங்க பாதை' என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளார் டட்லி-யை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதேபோல் அந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அசோக் - சிவகார்த்திகேயன் இணைய உள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com