சிறையில் திலீபை சந்தித்த பிரபல நடிகர்!

சிறையில் திலீபை சந்தித்த பிரபல நடிகர்!

சிறையில் திலீபை சந்தித்த பிரபல நடிகர்!

கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீபை சக நடிகரான ஜெயராம் சந்தித்துப் பேசினார்.

நடிகை பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப் கேரளாவில் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து  வருகிறார். அவர் பலமுறை ஜாமீன் மனுக்கல் தாக்கல்செய்யப்பட்ட போதும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. திலீபை அவரது நெருங்கிய நண்பர்களும், அவரது மனைவி காவ்யா மாதவனும் சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி திரைப்பட நடிகரும், நண்பருமான ஜெயராம் அலுவா சிறைக்கு சென்று திலீப்பிடம் நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள அவர், ‘திலீப் எனது நெருங்கிய நண்பர். ஆகையால் இது சாதரண சந்திப்புதான். வழக்கமாக ஒவ்வொரு ஓணம் பண்டிகையின் போது இருவரும் ஒருவருக்கொருவர் புத்தாடைகளை பரிசளித்து மகிழ்வோம். ஆகையால், அவரை காண விருப்பப்பட்டு வந்து சந்தித்தேன். இந்த வழக்கை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடவுள் அருளால் இந்தப் பிரச்னையில் இருந்து அவர் விரைவில் வெளிவருவார்’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திலீபின் தந்தைக்கு நாளை நினைவு தினம் என்பதால் சிறை நிர்வாக அவரை பரோலில் வெளிவர அனுமதித்துள்ளது. அவர் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை நான்கு மணி நேரம் போலீஸ் காவலுடன் அவரது தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com