மதன் பாப்
மதன் பாப்pt web

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

தனது சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமான செய்திதான் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
Published on

பிரபல நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. நீங்கள் கேட்டவை திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தனது தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மதன் பாப்..

நகைச்சுவை நடிகர் மதன் பாபின் சிரிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.. தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த மதன் பாபின் ஒரிஜினல் பெயர் எஸ். கிருஷ்ணமூர்த்தி..

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த மதன் பாப் இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர்.

மதன் பாப்
‘The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது ஏன்? நடுவர்கள் விளக்கத்தால் வெடித்த சர்ச்சை!

திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும்போதே சன் தொலைக்காட்சியில் வெளியான ‘அசத்தப் போவது யாரு?’ நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார் மதன் பாப்.. இந்நிலையில் கடந்த ஆண்டு முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மிகப்பெரிய நோய் இருப்பதாக கூறியுள்ளனர்.. இதனை அவர் தனியார் ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாலை ஐந்து மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com