ஸ்ருதிஹாசனை விளாசினாரா பிரபுசாலமன்? டிவிட்டரில் திடீர் பஞ்சாயத்து!

ஸ்ருதிஹாசனை விளாசினாரா பிரபுசாலமன்? டிவிட்டரில் திடீர் பஞ்சாயத்து!

ஸ்ருதிஹாசனை விளாசினாரா பிரபுசாலமன்? டிவிட்டரில் திடீர் பஞ்சாயத்து!
Published on

கொக்கி, மைனா, கும்கி, தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் இப்போது கும்கி 2 படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இருக்கிறார். இதில் புதுமுகங்கள் நடிக்க இருக்கின்றனர். 
இந்நிலையில் பிரபுசாலமன் பெயரில் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியானது. அதில், ’ஒரு நாளைக்கு 85 ஆயிரம் + 2.5 கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன்... இருந்தும் 5 மணி நேரத்துக்குப் பின் நடிப்பதில்லை. அந்த லெஜண்ட் நடிகரின் மகள்’ என்று கூறப்பட்டிருந்தது. நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனைதான் பிரபுசாலமன் இப்படி கூறியிருக்கிறார் என்று பரபரப்பு கிளம்பியது. 


இது தொடர்பாக டிவிட்டர்வாசிகள் வாக்குவாதத்தில் இறங்கினர். இதனால் பரபரப்பானது. இது தொடர்பாக விசாரித்தபோது பிரபுசாலமனுக்கு டிவிட்டர் கணக்கே இல்லை என்பதும் அவர் பெயரில் போலி கணக்குத் தொடங்கி யாரோ இப்படி பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com