
கடந்த சில நாட்களாகவே பாலிவுட் நடிகர் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அவருக்கு கொரோனா சோதனை நடத்தியதாகவும், அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது மற்றும் ஒரு பொய்யான செய்தி’’ என பதிவிட்டிருக்கிறார்.
அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யா ஆகிய நான்குபேரும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.