நஸ்ரியா உடனான காதல் வாழ்க்கை முதல் 'மாலிக்' ஓடிடி ரிலீஸ் வரை: மனம் திறந்த ஃபகத் ஃபாசில்

நஸ்ரியா உடனான காதல் வாழ்க்கை முதல் 'மாலிக்' ஓடிடி ரிலீஸ் வரை: மனம் திறந்த ஃபகத் ஃபாசில்

நஸ்ரியா உடனான காதல் வாழ்க்கை முதல் 'மாலிக்' ஓடிடி ரிலீஸ் வரை: மனம் திறந்த ஃபகத் ஃபாசில்
Published on

’மாலிக்’ படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, ‘விபத்திலிருந்து மீண்டது… ’மாலிக்’ ஓடிடி ரிலீஸ்..  நஸ்ரியாவுடனான காதல்’ போன்றவற்றை  நீண்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ஃபகத் ஃபாசில்.

ஃபகத் ஃபாசில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உயிருக்கு ஆபத்தான கொரோனாவுக்கு மத்தியில் இதை எழுவது சரியான நேரமல்ல. ஆனால், நாம் அனைவருமே முடிந்தவரை கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன்.

 ‘மலையன் குஞ்சு’ படப்பிடிப்பின்போது எனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு வருகிறேன். எனது, காலண்டரில் ஊரடங்கு என்பது கடந்த ஆண்டு மார்ச்-2 ஆம் தேதியிலிருந்தே தொடங்கி விட்டது. நான் அதிர்ஷ்டசாலி. இந்த விபத்தில் என் மனதை இழக்கவில்லை.

’மாலிக்’ படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பாளர் தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று காத்திருந்தார். ஆனால்,  கனத்த இதயத்துடன் எங்களது ஒட்டுமொத்த குழுவும் ஓடிடி வெளியீட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். படத்தைப் பார்க்கும்படி அனைவரையும் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். தியேட்டர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை என்னால் காத்திருக்கமுடியாது.  ஒவ்வொரு தனிமனிதனும் இயல்புநிலையை பெற போராடுகிறார்கள்” என்று விபத்திலிருந்து மீண்டது குறித்தும் ‘மாலிக்’ ஓடிடி ரிலீஸ் குறித்தும் கூறியிருப்பவர் நஸ்ரியாவுடனான திருமண வாழ்க்கையையும் காதல் நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.

” ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம், மோதிரத்துடன் ஒரு கடிதமும் எழுதி காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு, நஸ்ரியா ‘ஓகே’ என்று சொல்லவில்லை. ஆனால்,  ‘நோ’ என்றும் சொல்லவில்லை.  நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம்வரை வந்தது.

எங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். என்னை ஒரு சிறந்த நபராக நஸ்ரியா மாற்றினார். வாழ்க்கையை நஸ்ரியாவுடன் வாழத்தொடங்கிய பின்னர், எனது அனைத்து சாதனைகளும் அதிகமானது. நஸ்ரியாவை நான் அதிகமாக புரிந்துகொள்ளவில்லை என்றால் என் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது”  என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, ஃபகத் ஃபாசிலின் ‘சி யூ சுன்’, ’ஜோஜி’ படங்கள் அமேசான் பிரைமிலும், ’இருள்’ நெட் ஃபிளிக்ஸிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com