சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்? - வெளியான தகவல்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்? - வெளியான தகவல்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்? - வெளியான தகவல்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில், நடிகர் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து அண்மையில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்தது. இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில், சிம்பு நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், சிம்புவின் அடுத்தப் படமான ‘கொரோனா குமாரை’ இயக்க உள்ளார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ படத்தின் தொடர்ச்சியாக ‘கொரோனா குமார்’ படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் ‘கொரோனா குமார்’ படத்தில், வில்லனாக நடிக்க, படக்குழு அவரை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பகத் பாசில் தமிழில் ‘வேலைக்காரன்’, ‘சூப்பர் டீலக்ஸ்‘, ‘விக்ரம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் கூட்டணி பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளது. அண்மையில் இவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கொரோனா குமார்’ படத்தில் பகத் பாசில் இணைய உள்ளதாக வெளிவரும் தகவல்கள், சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com