மீண்டும் ஓடிடி-யில் ஃபஹத் ஃபாசில் படம்... மிரட்டும் 'இருள்' ட்ரெய்லர்!

மீண்டும் ஓடிடி-யில் ஃபஹத் ஃபாசில் படம்... மிரட்டும் 'இருள்' ட்ரெய்லர்!

மீண்டும் ஓடிடி-யில் ஃபஹத் ஃபாசில் படம்... மிரட்டும் 'இருள்' ட்ரெய்லர்!
Published on

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் 'இருள்' படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, அதன் கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் சொல்லியிருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். 'இருள்' ட்ரெய்லர் ஒரு க்ரைம்-த்ரில்லர் படத்திற்கான தொனியை வெளிப்படுத்தும் விதமாக சுவாரஸ்யமான காட்சிகளை கொண்டுள்ளது. ட்ரெய்லரில் ஃபஹத் ஃபாசில், ஹீரோயின் தர்ஷனா, சவுபின் ஆகிய மூன்று பேர் மட்டுமே தோன்றுகின்றனர்.

இந்த மூன்று பேரை சுற்றியே கதைக்களம் நகர்கிறது. ஒரு நாவலாசிரியராகத் சவுபின் தோன்றுகிறார். இதேபோல் ஃபஹத் கொலையாளியாகவும், தர்ஷனா பாதிக்கப்பட்டவராகவும் தோன்றுகிறார். ஒரு நிமிடம் மற்றும் 46 வினாடிகள் நீளமான ட்ரெய்லரில் தனது நாவலைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, 'இந்தப் புத்தகம் ஒரு குற்றவாளியை அடிப்படையாகக் கொண்டது, அவர் ஐந்து பேரைக் கொன்றார், மேலும் பெண்களுக்கு எதிராக பழிவாங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று சவுபின் கூறும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது.

2020 மலையாள திரைப்படமான 'சி யு ஸூன்' படத்திற்காக ஃபஹத், தர்ஷனாவுடன் இணைந்தார். அதன்பிறகு மீண்டும் இந்தப் படத்தில் தர்ஷனா ஃபஹத் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை நசீப் யூசுப் இசுதீன் இயக்கி இருக்கிறார். பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் தனது நண்பர்களுடன் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

ஃபஹத் நடிப்பில் கடைசியாக 'சி யு ஸூன்' ரிலீஸாகி இருந்தது. அதன்பிறகு 'இருள்' தான் அடுத்து வெளியாக இருக்கிறது. இந்த இரண்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதால், அவரது ரசிகர்கள் சற்றே உற்சாக குறைவில் இருப்பதாக மலையாள திரையுலகம் கருதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com