படத்திற்காக மெலிந்து போன பஹத் பாசில் - வியக்கும் ரசிகர்கள் !

படத்திற்காக மெலிந்து போன பஹத் பாசில் - வியக்கும் ரசிகர்கள் !
படத்திற்காக மெலிந்து போன பஹத் பாசில் - வியக்கும் ரசிகர்கள் !

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பஹத் பாசில். தமிழில் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். கதை தேர்வு, கதாபாத்திரம் தேர்வு ஆகியவற்றில் அதிக அக்கறை காட்டும் பஹத், தான் நடிக்கும் படங்களில் முழு ஈடுபாடு கொண்டவர்.

இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலான அவரது புகைப்படம், சினிமா மீதான அவரது ஈடுபாட்டை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மைக்கதை ஒன்றை மையமாக வைத்து உருவாகும் மாலிக் என்ற திரைப்படத்தில் பஹத் நடித்து வருகிறார். 20 வயது, 57 வயது என இரு வேறு வயதுடைய ஆளாக பஹத் நடிப்பதாக கூறப்படுகிறது.

இரு வேறு காலகட்டமாக உருவாகும் இந்த திரைப்படத்துக்காக பஹத் 10கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை குறைத்துள்ளார். மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு பஹத் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவ, அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் டேக் ஆஃப் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் மாலிக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com