ஃபேஸ்புக் சோதனை... அமிதாப் வேதனை..!

ஃபேஸ்புக் சோதனை... அமிதாப் வேதனை..!

ஃபேஸ்புக் சோதனை... அமிதாப் வேதனை..!
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது ஃபேஸ்புக் பக்கத்தால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை சமூக வலைத்தளங்களில் அவரின் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் அவரை 27 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் " ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுத வேண்டும். ஆனால் என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு கொண்ட பக்கம் முழுமையாக டவுன்லோடு ஆக மறுக்கிறது" என தெரிவித்திருக்கிறார். அத்தோடு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

இந்த பிரச்னையை அமிதாப் பச்சன் முதன் முறையாக சந்திக்கவில்லை. கடந்த மாதம் கூட ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமிதாப் பச்சன்" ஹே... ஃபேஸ்புக் எழுந்திரு. என்னுடைய பக்கம் முழுமையாக திறக்கப்படவில்லை" என வேதனையை கொட்டியிருந்தார். இந்நிலையில் தற்போதும் அவர் ஃபேஸ்புக்கால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com