எழில் காமெடியில் ஜி.வி.பிரகாஷ் குமார்

எழில் காமெடியில் ஜி.வி.பிரகாஷ் குமார்
எழில் காமெடியில் ஜி.வி.பிரகாஷ் குமார்

எழில் இயக்கும் காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். 

விஜய் நடித்த, துள்ளாத மனமும் துள்ளும், பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜீத் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம் ரவி நடித்த தீபாவளி உட்பட பல படங்களை இயக்கிய எழில், இப்போது காமெடி படங்களை இயக்கி வருகிறார். 

மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களுக்குப் பிறகு அவர், விஷ்ணுவிஷால் நடிக்கும் ஜகஜால கில்லாடி படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதை ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது. 

(சத்யா)

எழில்- ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. சத்யா இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறது. இதுவும் காமெடி படம்தான் எனவும் அடுத்த மாதம் முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com