\
'ஆளப்போறான் தமிழன் 2021ல்?’: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

'ஆளப்போறான் தமிழன் 2021ல்?’: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

'ஆளப்போறான் தமிழன் 2021ல்?’: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு
Published on: 

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் விஜய்யை சித்தரித்து ’மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக.. ஆளப்போறான் தமிழன் 2021ல்?’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடிகர் விஜய் சங்கீதா தம்பதிகளின் 21 வது திருமண நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது, அதிமுகவை தோற்றுவித்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் போல் விஜய்யையும், ஜெயலலிதா கெட்டப்பில் அவரது மனைவி சங்கீதாவையும் சித்தரித்து மதுரையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்தப் போஸ்டரில் புரட்சித் தலைவியே புரட்சித் தலைவரே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், மீண்டும் ’மக்கள் திலகத்தின் மறு உருவமே.. விரைவில் நல்லாசி தருக’ என்று ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் பட கெட்டப்பில் விஜய் படத்தைப் போட்டிருக்கிறார்கள். அதோடு, ’ஆளப்போறான் தமிழன் 2021ல்?’ என்ற கேள்வியோடு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்து இப்போஸ்டரை காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com