சினிமா
”ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது!” - நடிகர் விவேக்
”ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது!” - நடிகர் விவேக்
தமிழகத்தில் நாளை சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறும் போது, “ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக உரிமை வாக்களிப்பது. இது நமது கடமை. ஒவ்வொரு வாக்கும் நமது உரிமை. அதை நாம் விட்டுத்தரவே கூடாது. ஒருவர் வாக்களிப்பதால் என்ன பெரிய மாற்றம் வந்து விட போகிறது அல்லது வாக்களிக்காமல் இருப்பதால் என்ன மாற்றம் வந்துவிடபோகிறது என்று நினைக்கக்கூடாது. அப்படி நினைப்பது ஜனநாயகத்திற்கு நாம் செய்யக்கூடிய தீங்கு. ஆளுமையை தேர்ந்தெடுப்பது நமது விரல்மை. அதை நாம் மறந்துவிடக்கூடாது. காரணம், அதுதான் ஜனநாயகத்தின் வலிமை. ஆகையால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.