‘பக்கா பொங்கல் திருவிழா எண்டர்டெய்னர்..’ நெட்டிசன்கள் பார்வையில் ’ஈஸ்வரன்’

‘பக்கா பொங்கல் திருவிழா எண்டர்டெய்னர்..’ நெட்டிசன்கள் பார்வையில் ’ஈஸ்வரன்’
‘பக்கா பொங்கல் திருவிழா எண்டர்டெய்னர்..’ நெட்டிசன்கள் பார்வையில் ’ஈஸ்வரன்’

சிம்பு நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகியிருக்கிறது ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் வாசம் வீசும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெட்டிசன்கள் பார்வையில் ’ஈஸ்வரன்’ விமர்சன தொகுப்பு இதோ..

Stylish Suriya/Twitter

சிம்பு ஜெய்க்கும் போது நம்ம வீட்ல ஒரு பையன் ஜெய்ச்ச மாதிரி ஒரு பீல் வருது.

Lucifer Morningstar/ Twitter

படத்தோட பெரிய ப்ளஸ் சிம்பு தான். மனுஷன் ஒரு ஆளா நிண்டு மொத்த படத்தையும் கடைசி வர கொஞ்சம் கூட பிசிர் தட்டாமா கொண்டு போய்டாரு.

Karthik STR/Twitter

ஈஸ்வரன் படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். சிம்பு அண்ணா நடிப்பு அருமை. ரொம்ப பெரிய ஸ்டார்ன்னு இல்லாம இறங்கி நடிச்சு இருக்காரு. கிராமத்து கதை களம் காமெடின்னு எல்லாமே நல்லதான் இருக்கு.

ஆரி டகால்டி/Twitter

படம் ரொம்ப அருமையா இருக்கு. சிம்பு கிராமத்து பையனா அசத்தலா நடிச்சிருக்காரு. குடும்பத்தோட ரசித்து மகிழும் வகையில் படம் அமைஞ்சிருக்கு. சுசீந்திரன் டைரக்சன் சூப்பர். சிம்புவுக்கு இந்த படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமா அமையும்ன்றதுல சந்தேகமே இல்ல.

Master ShinChan/Twitter

#Eeswaran பக்கா பெஸ்டிவல் எண்டர்டெய்னர். ரொம்ப நாளைக்கு அப்றம் ஒரு நல்ல குடும்ப படம். சிம்பு, சுசீந்திரன் ரெண்டு பேருமே செம்ம கம்பேக்.  சாங், அண்ட் பிஜிஎம் தெர்ரிரிரிரிரி.

James Rhodey/ Twitter

ஈஸ்வரன் வந்துதான் தியேட்டர்காரன காப்பாத்தனும்னு இருந்திருக்கு..

thoranairaja/ Twitter

சிம்புவை விட பாரதிராஜாதான் அதிக சீன்ல வர்றாரு. சிம்புவை டைரக்டர் சுசீந்திரன் முழுமையாக பயன்படுத்தவில்லை. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ரமேஷ்/Twitter

சிம்பு ஆக்டிங் வேற லெவல். பாட்டு, ஃபைட், பஞ்ச் டயலாக், க்ளைமேக்ஸ் அருமை. பக்கா குடும்ப பொழுதுபோக்கு படம். மொத்தத்தில் அஜீத்துக்கு விஸ்வாசம், சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை, சிம்புவுக்கு ஈஸ்வரன்..

tamilparavai/Twitter

முதல் பாதி ரசிக்கும்படி உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. ஆனால் படம் வேகமாக முடிந்து விடுகிறது. ஒரு முறை பார்க்கலாம்.

மதுரை தமிழன்/Twitter

ஈஸ்வரனாக நல்ல வரவேற்பு பெற்று கம் பேக்கும் கொடுத்துள்ளார் சிம்பு. ஒரு ஹாப்பி எண்டிங் படமாக ஈஸ்வரன் அமைந்து உள்ளது . கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒரு ஜாலியான பேமிலி டிராமா பார்த்த சந்தோஷம் அனைவருக்கும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

RAMANI/Twitter

முதல் பாதி போனதே தெரியவில்லை. வேகமாக சென்றுவிட்டது. தலைவன் செமயா இருக்காரு.

rtsuresh/ Twitter

இந்தப் படம் சிம்புவுக்கு நிச்சயமாக ஒரு மீட்சியைத் தரும் திரைப்படம்தான். ஆக்ஷன், அழுகை, காமெடி என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார்.

joshikmtr// Twitter

வந்துட்டான் தலைவன் தீயா திரும்பி வந்துட்டான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுப்பது போன்று இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது. ஓவர் ரியாக்ஷன் தான் படத்தின் மைன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com