மும்பையில் தனுஷ் படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் நடந்து முடிந்தது. இப்போது இறுதிக்கட்டமாக மும்பையில் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது. அதனை அடுத்து பொள்ளாச்சியில் மீண்டும் சில காட்சிகளை படக்குழுவினர் எடுக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு 2016ல் தொடங்கியது. மிக வேகமாக படத்தின் முக்கால்வாசி வேலைகளை முடித்திருந்த இயக்குநர் கெளதம் மேனன் அந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தொடங்கினார். ஆகவே தனுஷ் படத்தின் வெளியீடு மிகவும் தள்ளிப்போக நேர்ந்தது.