சூதுகவ்வும் இயக்குநருக்கு நிச்சயதார்த்தம்

சூதுகவ்வும் இயக்குநருக்கு நிச்சயதார்த்தம்

சூதுகவ்வும் இயக்குநருக்கு நிச்சயதார்த்தம்
Published on

சூதுகவ்வும் திரைப்படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. 
விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும், காதலும் கடந்துபோகும் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்களத்தை சேர்ந்த சரண்யாவுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் அவரது உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் நவம்பர் மாதம் 9ம்தேதி நடைபெற உள்ளது. விஜய்சேதுபதி பெண் வேடத்தில் நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் திரைக்கதையில் நலன்குமாரசாமி பணியாற்றியுள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com