\
வெளியீட்டுக்கு தயார் நிலையில் விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள “எனிமி” திரைப்படம் 

வெளியீட்டுக்கு தயார் நிலையில் விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள “எனிமி” திரைப்படம் 

வெளியீட்டுக்கு தயார் நிலையில் விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள “எனிமி” திரைப்படம் 
Published on

விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் எனிமி.  இதில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.  மேலும் ஆயுதபூஜைக்கு திரைப் படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேப்போல் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட தயாரிப்பாளர் வினோத் முயற்சித்தார். ஆனால் தற்போதிருக்கும் சூழலால் ஓ.டி.டியில் வெளியிடலாமா என அவர் திட்டமிட்டு இருக்கிறார்.  அதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் எனிமி படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவதா அல்லது திரையரங்கில் வெளியிடுவதா என்பது முடிவாகி விடும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com