சினிமா
’நெஞ்சம் மறப்பதில்லை’: யுவனின் துள்ளல் இசையில் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ பாடல்!
’நெஞ்சம் மறப்பதில்லை’: யுவனின் துள்ளல் இசையில் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ பாடல்!
நாளை வெளியாகும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் 'நெஞ்சம் மறப்பதில்லை'. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அதேபோல், ட்ரைலர் வெளியானபோது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில், நாளை படம் வெளியாவதையொட்டி ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், யுவனின் துள்ளல் இசையில் எஸ்.ஜே சூர்யா குத்தாட்டம் போடுகிறார்.