ரமேஷ் இந்திரா இயக்கத்தில் குஷி ரவி நடித்துள்ள சீரிஸ் `Ayyana Mane'. கணவனின் வீட்டில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க புதுமணப் பெண் எடுக்கும் முயற்சிகளே கதை.
பென் பேட்க்லி நடித்துள்ள You சீரிஸின் ஐந்தாவது சீசன் வருகிறது. ஜோ மீண்டும் நியூயார்க் வருகிறான். நிம்மதியாக வாழ நினைக்கும் போது, அவனது கடந்த காலம் என்ன சிக்கல்களைக் கொடுக்கிறது என்பதே கதை.
Kookie Gulati - Robbie Grewal இயக்கத்தில் சைஃப் அலிகான் - ஜெய்தீப் நடித்துள்ள படம் `Jewel Thief – The Heist Begins'. ரெட் டைமண்டை திருட நடக்கும் திட்டங்களே கதை.
Gareth Evans இயக்கத்தில் டாம் ஹார்டி நடித்துள்ள படம் `Havoc'. அரசியல்வாதி ஒருவரின் மகனை காப்பாற்ற ஹீரோ செய்யும் சாகசங்களே கதை.
Halina Reijn இயக்கத்தில் Nicole Kidman நடித்த படம் ` Babygirl'. ரோமி மேத்திஸ் என்ற சி இ ஓவுக்கு, இளைஞர் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் விளைவுகள் பற்றி பேசுகிறது படம்.
மோகன் லால் நடிப்பில் ப்ரித்விராஜ் இயக்கிய படம் `L2: Empuraan’. அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து குடும்பத்தை கப்பாற்றிய ஸ்டீபன், பெரிய நெட்வொர்க்கின் தலைவன் அப்ராம் குரேஷி என முடிந்தது முதல் பாகம், இந்த பாகத்தில் அப்ராம் யார் என சொல்லப்படுவதே கதை.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் `வீர தீர சூரன்’. மளிகை கடை வைத்திருக்கும் காளியின் இன்னொரு முகம் என்ன? அதனால் வரும் பிரச்சனைகள் என்ன? என்பதே கதை.
பிரிட்டோ இயக்கத்தில் ரியோ, பாரதிராஜா, யோகிபாபு நடித்த படம் `நிறம் மாறும் உலகில்’. வெவ்வேறு மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை சூழலுமே கதைக் களம்.
சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள படம் `கேங்கர்ஸ்'. கிராமத்தில் நடக்கும் கொள்ளை ஒன்றே படத்தின் கதை.
ஹோசிமின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் `சுமோ'. முன்பின் பரிட்சயம் இல்லாதவரின் அறிமுகம் ஹீரோவை எங்கு அழைத்து செல்கிறது என்பதே கதை.
கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம் ஜி நடித்துள்ள படம் `வல்லமை'. மக்களுக்காக ஒரு தந்தை செய்யும் விஷயங்களே கதை.
மோகன கிருஷ்ண இந்திரகண்டி இயக்கத்தில் ப்ரியதர்ஷி, வெண்ணலா கிஷோர் நடித்துள்ள படம் `Sarangapani Jathakam'. ஜாதகத்தில் நம்பிக்கை உள்ள சாரங்கபாணி வாழ்க்கையில் நடப்பவையே கதை.
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் `Thudarum'. டிரைவர் ஷண்முகம், தன்னுடைய அம்பாசிட்டர் காரின் மேல் முகுந்த பாசம் வைத்திருக்கிறார். அது காணாமல் போன பின்பு என்னாகிறது என்பதே கதை.
ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதீக் காந்தி இயக்கியுள்ள படம் `Phule'. பெண் கல்விக்கான அடிப்படை பிறந்த வரலாற்றை பேசும் படம்.
தேஜஸ் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ள படம் `Ground Zero'. 2001ல் நடந்த பார்லிமென்ட் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆப்ரேஷன் தான் கதை.
Gavin O'Connor இயக்கத்தில் Ben Affleck நடித்துள்ள படம் `The Accountant 2'. கொலை ஒன்றின் பின் இருக்கும் மர்மத்தை தீர்ப்பதே கதை.
David F. Sandberg இயக்கியுள்ள படம் `Until Dawn'. தங்கள் நண்பர் குழுவில் இருந்து ஒருவர் தொலைந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு, மீண்டும் அக்குழு ஒன்று கூடுகிறது. அதன் பின் நடப்பவையே கதை.