எமி ஜாக்சன் அப்படிச் சொல்வதா? தயாரிப்பாளர் எதிர்ப்பு

எமி ஜாக்சன் அப்படிச் சொல்வதா? தயாரிப்பாளர் எதிர்ப்பு
எமி ஜாக்சன் அப்படிச் சொல்வதா? தயாரிப்பாளர் எதிர்ப்பு
Published on


’குயின்’ ரீமேக்கில் எமி ஜாக்சன் நடிக்க மறுத்த கேரக்டரில் எல்லி அவ்ரம் நடிக்கிறார். 

இந்தியில் கங்கனா ரனவ்த் நடித்து ஹிட்டான படம், ‘குயின்’. இந்தப் படம் இப்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். 
இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைக்க, எமி ஜாக்சனிடம் கேட்டனர். ஒரிஜினலில் அந்த கேரக்டரில் லிசா ஹைடன் நடித்திருந்தார். இதில் நடிக்க, எமி ஜாக்சனுக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் பேசப்பட்டது. ஆனால் எமி ஜாக்சன் மறுத்துவிட்டாராம். 

இதுபற்றி எமி ஜாக்சன், ’ இந்தப் படம் தொடர்பாக இயக்குனரை சந்தித்து பேசினேன். ரீமேக்குக்காக கதையை மாற்றிவிட்டனர். அது வொர்க் அவுட் ஆகாது என்பதால் நடிக்கவில்லை’ என்று சொன்னாராம்.

ஆனால், இதை மறுத்துள்ள தயாரிப்பாளர் மனுகுமரன், ’மற்ற மொழிகளுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். லிசா ஹைடன் நடித்த கேரக்டரில் நடிக்க வைக்க எமி ஜாக்சனிடம் பேசியது உண்மை. ஆனால் அவர் இந்தப் படத்தை இயக்கும் இயக்குனர்களை சந்திக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது கதை பற்றி கூறியிருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
இப்போது எல்லி அவ்ரம் என்ற புதுமுகம் அந்த கேரக்டரில் நடிக்கிறார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எல்லி, சில இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கிலும் மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஷிபானி தண்டேகர் என்ற நடிகையும் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com