விஜய்சேதுபதியின் அடுத்த படமான 96 ல் த்ரிஷா ஆசிரியையாக நடித்து வருகிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரேம்குமார் 96 படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் 36 வயது இளைஞராகவும் 96 வயது முதியவராகவும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அவருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள த்ரிஷா இந்தப்படத்தில் ஆசிரியையாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவர் ஒரு குழந்தையுடன் இருக்கும் படம் வெளியாகி வைரலாகி வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் 8 கோடி ரூபாயில் இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு ரிலீசாக உள்ளது. 1996 காலகட்டத்தில் நடைபெறும் கதை என்பதாலும், 96 வயது முதியவராக விஜய்சேதுபதி நடிப்பதாலும் இந்தப்படத்திற்கு 96 எனத் தலைப்பிட்டு உள்ளனர்.