Lyca நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை!

பிரபல சினிமா நிறுவனமான லைக்காவுக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Lyca
LycaTwitter

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைக்கா நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தியாகராய நகர் உள்ள விஜயராகவா சாலையில் உள்ள லைக்கா நிறுவன அலுவலகம், அடையாறில் உள்ள சுபாஷ்கரனின் இல்லம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விஜயராகவா சாலையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

lyca
lycaTwitter

வெளிநாடுகளில் பெரிய அளவில் இந்நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான கணக்குகள் தொடர்பாகவும் (இதை சரியாக அந்நிறுவனம் காட்டவில்லை என புகார் உள்ளது) சோதனை நடைபெறுவதாக தெரிய வருகிறது. சோதனை முடிவில் நிறுவனம் எந்த அளவுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வரும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com