ட்ரைலரில் தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு? - ஈஸ்வரன்  ட்ரைலர் வெளியீடு!

ட்ரைலரில் தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு? - ஈஸ்வரன் ட்ரைலர் வெளியீடு!

ட்ரைலரில் தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு? - ஈஸ்வரன் ட்ரைலர் வெளியீடு!
Published on

பொங்கலுக்கு வெளியாகும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக எடை குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த, இப்படத்தின் படப்பிடிப்பு, பாடல்கள், டப்பிங் என அனைத்து பணிகளையும் முடித்துக்கொடுத்தார் சிம்பு.  ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

ஏற்கெனவே, மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மாஸ்டருடன் ஈஸ்வன் படமும் வெளியாகிறது என்பதை சிம்பு உறுதி செய்தார். அதனைத்தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றதையடுத்து, இன்று 5;04 மணிக்கு ஈஸ்வரன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிராமப்புறக் கதைக்களத்தைக் கொண்ட அந்த ட்ரைலரில், ’நீ அழிக்கறதுக்காக வந்த ’அசுரன்’ன்னா, நான் காக்குறதுக்காக வந்திருக்க ’ஈஸ்வரன்’டா என்று டயலாக் பேசுகிறார். எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் –அஜித், என்றால் அடுத்ததாக சிம்பு – தனுஷுக்காகத்தான் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

எப்போதும் தனுஷ் - சிம்பு தனது படங்களில் டயலாக்குகளின் மூலம் மோதிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், மீண்டும் சிம்பு பேசியிருக்கும் இந்த டயலாக்கால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமாகவும் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com