துல்கர் சல்மானின் படங்களில் அதிக வசூலைக் குவித்த ’குருப்’: ரூ.50 கோடி கடந்து சாதனை

துல்கர் சல்மானின் படங்களில் அதிக வசூலைக் குவித்த ’குருப்’: ரூ.50 கோடி கடந்து சாதனை
துல்கர் சல்மானின் படங்களில் அதிக வசூலைக் குவித்த ’குருப்’: ரூ.50 கோடி கடந்து சாதனை

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குருப்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர் சல்மானின் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி ’குருப்’ திரைப்படம் வெளியானது. இன்ஸுரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து மாட்டிக்கொண்ட சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது ‘குருப்’.

சுகுமாரா குருப்பாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். இந்த நிலையில், படம் வெளியான நான்கே நாட்களில் உலகம் முழுக்க 50 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான ‘குருப்’ தமிழகத்தில் மட்டுமே முதல் வாரத்தில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுக்க ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம், துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை கடந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com