\
பைனான்ஸ் சிக்கல்: தள்ளிப்போகிறது ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் ?

பைனான்ஸ் சிக்கல்: தள்ளிப்போகிறது ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் ?

பைனான்ஸ் சிக்கல்: தள்ளிப்போகிறது ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் ?
Published on

பைனான்ஸ் சிக்கல் காரணமாக ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உட்பட பலர் நடித்துள்ள படம், ’நெஞ்சம் மறப்பதில்லை’. கவுதம் வாசுதேவ் மேனனின் ஒன்றேகா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பேய்ப்படமான இது, வரும் 30 தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக, படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னை முடிந்த பின்பே படம் ரிலீஸ் ஆகும் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com