’மாநாடு’ படத்திற்காக டப்பிங் பேசி வலி பின்னிடுச்சி” - எஸ்.ஜே சூர்யா
“மாநாடு படத்திற்காக டப்பிங் பேசி வலி பின்னிடுச்சி” என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’மாநாடு’ வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது சென்றுகொண்டிருக்கிறது. படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருக்கும் எஸ்.ஜே சூர்யா தனது டப்பிங்கை நிறைவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘மாநாடு’ படத்திற்கான 8 நாட்கள் டப்பிங் பணிகளை 5 நாட்களில் முடித்தேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, முதுகுத்தண்டு, தொண்டை போய்விட்டன. வலி பின்னுது. குறைந்தப்பட்சம் 10 நாட்கள் ஓய்வு தருமாறு கெஞ்சினேன். ஆனால், அவுட் புட்டைப் பார்த்தபிறகு நவம்பர் 25 தாண்டா தீபாவளி” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.