சினிமா
நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஜெய்யை கைது செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடையாறு மேம்பாலத்தின் மீது குடிபோதையில் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ஜெய் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால் 2 நாட்களில் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜெய்யை கைது செய்ய வீட்டுக்கு சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான வழக்கில் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு காவல்துறை தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.