\
போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு: பாகுபலி நடிகர் ராணா டகுபதியிடம் விசாரணை

போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு: பாகுபலி நடிகர் ராணா டகுபதியிடம் விசாரணை

போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு: பாகுபலி நடிகர் ராணா டகுபதியிடம் விசாரணை
Published on

போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சார்மி கவுர் உள்ளிட்டோர் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கினர். இதில் பண மோசடியும் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பூரி ஜெகந்நாத், சார்மி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரிடம் சமீபத்தில் அமலாக்கத்துறையினர் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி இன்று ஆஜாரானார். அவரிடம் அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com