சினிமா
போதைபொருள் வழக்கு: நடிகருக்கு லோன் கொடுக்க வங்கி மறுப்பு
போதைபொருள் வழக்கு: நடிகருக்கு லோன் கொடுக்க வங்கி மறுப்பு
போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியதால் தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கு வங்கி ஒன்று கடன் கொடுக்க மறுத்துள்ளது.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து தெலுங்கு நடிகர், நடிகைகள் நேரில் ஆஜராகில் விளக்கமளிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து விசாரணைக்கு நடிகர் நடிகைகள் ஆஜராகி வருகின்றனர். விசாரணைக்காக கடந்த 24ம் தேதி நடிகர் நவ்தீப் ஆஜனாரார். இதனிடையே அவர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரானதை காரணம் கூறி நவ்தீப்பிற்கு கடன் வழங்க மறுத்துள்ள வங்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.