\
800 பட சர்ச்சை... முரளிதரன் கூறியதால் விஜய்சேதுபதி விலகியுள்ளார் - கடம்பூர் ராஜு

800 பட சர்ச்சை... முரளிதரன் கூறியதால் விஜய்சேதுபதி விலகியுள்ளார் - கடம்பூர் ராஜு

800 பட சர்ச்சை... முரளிதரன் கூறியதால் விஜய்சேதுபதி விலகியுள்ளார் - கடம்பூர் ராஜு
Published on

முரளிதரனே 800 திரைப்படத்தை கைவிடுமாறு கூறியதால், விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியுள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, நேற்றைய முன்தினம் முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


விஜய் சேதுபதியின் 800 பட விலகல் சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கு, முரளிதரனே 800 திரைப்படத்தை கைவிடுமாறு கூறியதால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் மேலும் அது முடிந்த செய்தி எனவும், இனி அதைப்பற்றி பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com