வெளியானது ’த்ரிஷ்யம் 2’ டீசர் – விரைவில் ஓடிடியில் படம் வெளியீடு!

வெளியானது ’த்ரிஷ்யம் 2’ டீசர் – விரைவில் ஓடிடியில் படம் வெளியீடு!
வெளியானது ’த்ரிஷ்யம் 2’ டீசர் – விரைவில் ஓடிடியில் படம் வெளியீடு!

புத்தாண்டையொட்டி ’த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசரை உற்சாகமுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் “த்ரிஷ்யம்”. கேரள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படம் என தனி முத்திரை பதித்தது. திரையிடப்பட்ட அரங்குகளிலெல்லாம் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையோடு, பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த வெற்றிக்குப்பின்தான் “த்ரிஷ்யம்” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்தான்.

த்ரில்லர் கதைக்கருவை குடும்பத்தோடு இணைத்திருந்த த்ரிஷ்யம் 2 படத்தின் அதிக சதவீத படப்பிடிப்பும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு சமீபத்தில்தான் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை புத்தாண்டு பிறந்த 12 மணிக்கு  நடிகர் மோகன்லால் வெளியிட்டு, விரைவில் அமேசான் பிரைமில் படம் வெளியாகவிருக்கிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார். கேரளாவில் இப்போதுவரை திரையரங்குகள் கொரோனா தொற்றின் அச்சத்தால் திறக்கப்படவில்லை என்பதால் படங்கள்  ஓடிடியில்தான் வெளியாகி வருகின்றன. ‘சூபியும் சுஜாதாவும்’ படம்தான் கேரளாவில் ஓடிடியில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Georgekutty and his family are coming soon on @PrimeVideoIN#Drishyam2OnPrime #HappyNewYear2021 #MeenaSagar #JeethuJoseph @antonypbvr @aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/5l7cfCdCS3
— Mohanlal (@Mohanlal) December 31, 2020

’த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சி என்பதால் ‘த்ரிஷ்யம் 2’ விலும் அதே நடிகர்கள்தான் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் முடிக்கப்பட்ட காவல்நிலையத்தை ஒட்டியே டீசரின் தொடர்ச்சி காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்போடு சினிமா ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com