நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட 5 திரைப்படங்களைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட 5 திரைப்படங்களைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட 5 திரைப்படங்களைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

தமிழில் மாயா, ஜோக்கர், அருவி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட 5 திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம், கார்த்தி நடிப்பில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. அதேபோல், சூர்யா நடித்த ’என்ஜிகே’ திரைப்படத்தையும் தயாரித்தது. கார்த்தி - சூர்யா படங்களை தவிர மாயா, ஜோக்கர், அருவி உள்ளிட்ட படங்களையும் தயாரித்து பாராட்டை பெற்றுள்ளன. 

தற்போது இந்த நிறுவனம் சுமார் 30 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. அதில், நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் 5 கதைகளை தேர்வு செய்துள்ளனர். அந்த திரைப்படங்களின் முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com