\
சல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது!

சல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது!

சல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது!
Published on: 

இந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல முயன்ற, ஹரியானாவைச் சேர்ந்த பிரபல தாதா சம்பத் நெஹ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்தவன் சம்பத் நெஹ்ரா. ஏராளமான கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இவன் மீது உள்ளன. ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஹரி யானாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரித்தபோது, சல்மான் கானைக் கொல்லத் திட்டம் போட்டது தெரிய வந்தது. 

இதற்காக மும்பை சென்று சல்மான் கான் வீடு இருக்கும் பகுதியில் 2 நாட்களாக அவரது நடவடிக்கையை நோட்டம் போட்டுள்ளான். இதையடு த்து அவனை ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி ஹரியானா மாநில டெபுடி ஐஜிஷ் பாலன் கூறும்போது, ‘நெஹ்ரா, பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவைச் சேர்ந்தவன். 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இவன் மீது உள்ளன. கார் திருட்டு வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்’ என்றார். டெபுடி ஐஜி, சதீஷ் பாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com