Doraemon Director Tsutomu Shibayama Dies At 84
சுடோமு ஷிபாயாமாx page

அனிமேஷன் திரையுலகின் ஜாம்பவான்.. 'டோரேமான்’ இயக்குநர் சுடோமு ஷிபயாமா மரணம்!

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் தனது கற்பனைத் திறனால் கவர்ந்த பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டோரிமான்' திரைப்படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபாயாமா, தனது 84-வது வயதில் காலமானார்.
Published on

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் தனது கற்பனைத் திறனால் கவர்ந்த பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டோரிமான்' திரைப்படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபாயாமா, தனது 84-வது வயதில் காலமானார்.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் தனது கற்பனைத் திறனால் கவர்ந்த பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டோரிமான்' திரைப்படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபாயாமா, தனது 84-வது வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1983-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை வெளியான பல 'டோரேமான்' திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். டோரிமான் கதாபாத்திரத்தை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மறைந்த இயக்குநருக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் எவ்வித மலர்வளையங்களோ அல்லது பணமுடிப்புகளோ வழங்க வேண்டாம்’ என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுடோமு ஷிபாயாமா
சுடோமு ஷிபாயாமா

அவரது இறுதிச் சடங்குகள் நெருங்கிய உறவினர்களுடன் மிக எளிமையாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோரிமான் மட்டுமின்றி, 'ராக்மேன்' மற்றும் 'சிபிமருக்கோ-சான்' போன்ற புகழ்பெற்ற அனிமேஷன் தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். எதிர்காலத்திலிருந்து வந்த ஓர் இயந்திரப் பூனை (டோரேமான்) மற்றும் நோபிட்டா என்ற சிறுவனின் நட்பை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் குழந்தைகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்தத் தொடரின் வெற்றிக்கு ஷிபாயாமாவின் நுணுக்கமான இயக்கமே அடித்தளமாக அமைந்தது. அவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள அனிமேஷன் கலைஞர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com