\

நயன் பேயாக மாறிய டோரா எப்போ வருது?

நயன் பேயாக மாறிய டோரா எப்போ வருது?
Published on

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள டோரா படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்குணம் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளார். டோரா படத்திற்கு சிவா சாலமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. காதல் படங்களில் நடித்து வந்த நயன்தாரா மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு பேய் படங்களில் களமிறங்கியுள்ளார். காதல் நாயகியாக வலம் வந்த நயன் பேயாக மாறியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com