’மீ டூ’வை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்
’மீ டூ’வை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. இந்தப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாஸூதின் சித்திக், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Read Also -> கசிந்ததா ‘சர்கார்’ கதை?
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நிர்ணயிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் முன்னதாகவே முடிந்துவிட்டது’ என்றும் விஜயதசமி வாழ்த்துகளையும் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த்.
Read Also -> “எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா
இதையடுத்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து அவர் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும். டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி பற்றிய அறிவிப்பு வெளிவராது. கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டன. மீ டூ பற்றி கேட்கிறார்கள். அது பெண்களுக்கு சாதகமானது. அதைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது’ என்றார்.