’பத்மாவதி’யை வெளியிடக் கூடாது: ராஜஸ்தான் முதல்வர் எதிர்ப்பு

’பத்மாவதி’யை வெளியிடக் கூடாது: ராஜஸ்தான் முதல்வர் எதிர்ப்பு

’பத்மாவதி’யை வெளியிடக் கூடாது: ராஜஸ்தான் முதல்வர் எதிர்ப்பு
Published on

‘பத்மாவதி’ திரைப்படத்தில் மாற்றங்கள் செய்யும் வரை வெளியிடக் கூடாது என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்களை தவறாக சித்தரித்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் படத்தில் அவசியமான திருத்தங்களை செய்யும் வரை படத்தை வெளியிடவிடக் கூடாது எனவும், எந்த ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் இருக்கக்கூடாது எனவும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

முன்னதாக உத்தர பிரதேச அரசும் உண்மைக்கு புறம்பான சம்பவங்களை சொல்லியிருப்பதாக கூறி பத்மாவதி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியிருந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com