சினிமா
ஸ்ரீதேவி மகளை நாகார்ஜுனா அறிமுகப்படுத்துகிறாரா ?
ஸ்ரீதேவி மகளை நாகார்ஜுனா அறிமுகப்படுத்துகிறாரா ?
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்த இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகினரிடையே பலத்த போட்டி. இந்நிலையில் தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா, தன் மகன் அகில் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் ஜான்வியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இதற்காக ஸ்ரீதேவியிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனாவிடம் கேட்டபோது, ‘ அந்த செய்தியில் உண்மையில்லை. அகில் ஜோடியாக நடிக்க வைக்க, நான் யாரிடமும் பேசவில்லை’ என்றார்.
அகில் நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்குகிறார். இதில் புதுமுகம் ஒருவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருக்கிறார் விக்ரம் குமார். இதற்கிடையே ஜான்வி கபூர், இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.