என் பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்- மறுப்பு சொல்கிறார் ராகவா லாரன்ஸ்

என் பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்- மறுப்பு சொல்கிறார் ராகவா லாரன்ஸ்

என் பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்- மறுப்பு சொல்கிறார் ராகவா லாரன்ஸ்
Published on

எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.தயவு செய்து அரசியல் கலக்காதீர்கள் என்று லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

மேலும் “நேற்று எனது முனி4 படத்திற்குப் பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்.தரிசனம் முடிந்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள்..சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றிக் கேட்டார்கள்.  கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன். நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் ‘காலம் பதில் சொல்லும்’என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்.  ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பாஜகவுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுயுள்ளார்கள். சேவையும் ஆன்மிகமும்தான் எனக்குப் பிடித்த விஷயம். அரசியல் அல்ல.

அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்று கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்” என்று அறிக்கை விடுத்துள்ளார் ராகவாலாரன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com