\
ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!

ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!

ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!
Published on

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்காக அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியை தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com