ஷாக் கொடுத்த மின்கட்டணம்... திவ்யா தத்தா அதிர்ச்சி ட்வீட்

ஷாக் கொடுத்த மின்கட்டணம்... திவ்யா தத்தா அதிர்ச்சி ட்வீட்
ஷாக் கொடுத்த மின்கட்டணம்...  திவ்யா தத்தா அதிர்ச்சி ட்வீட்

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை ஏகத்துக்கும் உயர்த்தி வாங்கிவிட்டதாகக் கூறிய புகார்களின் ஆவி அடங்குவதற்குள் மும்பையில் இருந்து ஒரு குரல்.

பாலிவுட் நடிகையான திவ்யா தத்தாவுக்கு ரூ. 51 ஆயிரம் மின்கட்டணத்தை அனுப்பி ஷாக் கொடுத்துள்ளது மின்வாரியம். அவரைப்போல டாப்ஸி, ரிச்சா சத்தா மற்றும் சோஹா அலிகான் ஆகியோரும் இதுபோன்ற மின்கட்டண உயர்வைச் சந்தித்துள்ளனர்.  

மின்கட்டணத் தொகை ரூ. 51 ஆயிரம் செலுத்தவேண்டும் என்ற தகவலைப் பார்த்ததும் அதிர்ந்துபோன நடிகை திவ்யா தத்தா, என்ன நடக்கிறது. இது ஊரடங்குக் காலத்துக்கான அன்பளிப்பா? என்று ட்விட்டரில் கேட்டுள்ளார். அவரது  ரசிகர்களும் ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com