’ஹிருதயம்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லாலின் ’ஹிருதயம்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது.
வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ கடந்த ஜனவரி 21 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சென்னையையே ‘ஹிருதயம்’ படத்தின் இதயமாக்கி ’ஹிட்’ அடித்துள்ளார் இயக்குநர் வினீத் சீனிவாசன். தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவதே, இதற்குச் சாட்சி. ஏற்கனவே, இப்படத்தின் ‘தர்ஷனா’ பாடல் வரவேற்பைப் பெற்ற நிலையில், படமும் வெற்றியடைந்துள்ளதால், ஓடிடி குறித்த தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், ‘ஹிருதயம்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாகவும் விரைவில் இதற்கான வெளியீட்டுத் தேதியுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.