2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் படத்தின் இரண்டாவது பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார்-2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக Twentieth century box தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் ‘அவதார்-2’ ஆம் பாகம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை அப்போது வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவதார்- 3, 4, 5ஆம் பாகங்களும் தயாரிக்கப்படும் என்றும் முறையே அவை 2020, 2022, 2023ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது அவதார் படத்தின் இரண்டாவது பாகம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. motion capturing தொழிட்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அவதார் படத்தில் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. ‘அவதார்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது கேமரூன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.