\
தெறி, கபாலி, பாகுபலி-2 சாதனைகளை தகர்த்த விவேகம்

தெறி, கபாலி, பாகுபலி-2 சாதனைகளை தகர்த்த விவேகம்

தெறி, கபாலி, பாகுபலி-2 சாதனைகளை தகர்த்த விவேகம்
Published on

யுடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர், டீசர் என சாதனைகளைப் படைத்து வரும் விவேகம் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்க இருக்கிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் இன்னும் 2 நாட்களில் ரிலீசாக இருக்கிறது. முதல் நாளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் புக் ஆகி ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இதனையடுத்து, இப்படத்தின் முன்பதிவு அனைத்து இடங்களிலும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் 300 திரையரங்குகளுக்கு மேல் விவேகம் படம் திரையிடப்பட உள்ளது. திருவனந்தபுரத்தில் மட்டும் ஒரே நாளில் 50 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்கு முன் அதிகப்பட்சமாக கபாலி 48 காட்சிகளும், பாகுபலி-2 44 காட்சிகளும், தெறி 44 காட்சிகளும் திரையிடப்பட்டிருந்தன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் 50 காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com