\
ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்: தேடிப் பிடித்த போலீஸ்!

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்: தேடிப் பிடித்த போலீஸ்!

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்: தேடிப் பிடித்த போலீஸ்!
Published on

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேனாம்பேட்டை போலீஸார், மிரட்டல் விடுத்த நபர் யார் எனத் தேடி வந்தனர்.

இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com