\
சரவணனின் ’தி லெஜெண்ட்’ : 'மோசலோ மொசலு' பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி

சரவணனின் ’தி லெஜெண்ட்’ : 'மோசலோ மொசலு' பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி

சரவணனின் ’தி லெஜெண்ட்’ : 'மோசலோ மொசலு' பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி
Published on: 

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் ‘டி லெஜெண்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் சரவணன். நாயகியாக பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இன்று முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘தி லெஜெண்ட்’ என்று தலைப்பிட்டுள்ளதால் தமிழ், தெலுங்கின் லெஜெண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோரை வைத்து பாடலை வெளியிட வைத்துள்ளது படக்குழு. பா.விஜய் எழுதியுள்ள ’மொசலோ மொசலு’ என்று துவங்கும் பாடலில் ஸ்டைலிஷாக நடனம் ஆடி கவனம் ஈர்க்கிறார் சரவணன். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே கமெண்ட்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார்கள் ரசிகர்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com