சினிமா
காட்டுக்கு போனது ஏன்?: இயக்குனர் விஜய் விளக்கம்
காட்டுக்கு போனது ஏன்?: இயக்குனர் விஜய் விளக்கம்
வனமகன் கதை தன்னை காட்டுக்கு அழைத்துச் சென்றது என இயக்குனர் விஜய் கூறினார்.
ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்திருக்கும் படம் வனமகன். விஜய் இயக்கியுள்ளார். அந்தமானில் உள்ள பூர்வ குடிமக்களின் வாழ்வியலை காதல் கதையின் மூலம் சொல்லும் படமான இதன் ட்ரெய்லர் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர் விஜய், இந்தப் படத்தின் கதை என்னை காட்டுக்கு அழைத்துச் சென்றது. ஜெயம் ரவி இல்லையென்றால் இந்த படத்தை சிறப்பாக முடித்திருக்க முடியாது என்றார்.
விழாவில் எடிட்டர் அண்டோனி, சாயிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.