\
நேற்றுவரை டைட்டானிக் ரோஸ்ஸை ரசித்தேன்; இன்றுமுதல் ’டான்சிங் ரோஸ்’தான்: விக்னேஷ் சிவன்

நேற்றுவரை டைட்டானிக் ரோஸ்ஸை ரசித்தேன்; இன்றுமுதல் ’டான்சிங் ரோஸ்’தான்: விக்னேஷ் சிவன்

நேற்றுவரை டைட்டானிக் ரோஸ்ஸை ரசித்தேன்; இன்றுமுதல் ’டான்சிங் ரோஸ்’தான்: விக்னேஷ் சிவன்
Published on

இயக்குநர் விக்னேஷ் சிவன் ’சார்பட்டா பரம்பரை’படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர், பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்திற்கு ஒருபுறம் கிடைக்கும் பாராட்டு இருந்தாலும் குறிப்பாக, இப்படத்தில் ’டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு திடீர் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.

உடல் மொழியாலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில், ”நேற்றுவரை‘டைட்டானிக்’ ரோஸ்ஸை ரசித்தேன். இன்று முதல் டான்சிங் ரோஸ்ஸை ரசிக்கிறேன். ‘சார்பட்டா பரம்பரை’ என்ன ஒரு அற்புதமான திரைப்படம்” என்று படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com