"ஜெய் பீம் படக்குழுவிற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம்" - வெற்றிமாறன் ஆதரவு
நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில் இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே.
நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்தவொரு படைப்புமே சமூக நீதிக்கான ஆயுதம்தான்.ஜெய் பீம் முழு படக்குழுவிற்கும் நாங்கள் துணையாக நிற்கிறோம்” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீரும் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். “சமூகநீதியை நிலைநாட்ட வற்புறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்” என்று கூறியுள்ளார்.